House Construction Tips in Tamil சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள் .....!! 1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க .. 2. வீடு கட்டும்போது தண்ணீர் , அஸ்திவாரம் , சிமெண்ட் , செங்கல் , ஃப்ளோர் , பெயிண்ட் என வ ீட்டின் ஒவ்வொரு கட்டுமான அம்சத்திலும் நம் ஆலோசனை மற்றும் கண்காணிப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்வது , வீட்டின் குவாலிட்டியைக் கூட்டும் . தண்ணீர் : 3.. தண்ணீரின் தரம் மிக முக்கியம் . அதிக உப்பு உள்ள தண்ணீரில் வீடு கட்டினால் , கட்டுமானம் மெள்ள மெள்ள அரி மானத்துக்கு உள்ளாகும் . அதற்காக குடிநீரில் வீடு கட்ட வேண்டும் என்றில்லை . அதிகம் உப்பில்லாமல் இருப்பது அவசியம் . 4. தண்ணீர் தேவைகளுக்காக ஆழ்துளைக் கிணறு அமைத்து , நீர்மூழ்கி மோட்டார்களைத் தேர்ந்தெடுக்கும்போது சில விக்ஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும் . தண்ணீர் கொஞ்சம் கூட உட்புக வாய்ப்பில்லாத மோட்டார் பம்புகளையே தேர்ந்தெடுக்க வேண்டும் . அப்போதுதான் மின்கசிவால் பிரச்சனை இருக்காது . 5. இப்போதெல்லாம் அதிகபடியான வெப்பத்தைத் தாக்குப் பிடிக்கும் மோட்டார்கள் மார...